அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் பாதுகாப்பு படை அதிகாரி உயிரிழந்தார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தையடுத்து அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, வெளிநாட்டினர் மீதான சோதனையை தீவிரப்படுத்துவது என தனது குடியேற்ற கொள்கையை மறுசீரமைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் அனைத்து புகலிட விண்ணப்பங்களையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து நாட்டினருக்கான வழங்கப்பட்ட புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் இயக்குனர் ஜோசப் எட்லோ கூறியதாவது: ஒவ்வொரு வெளிநாட்டவரும் அதிகபட்சமாக சரிபார்க்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்யும் வரை புகலிட கோரிக்கைகளின் இடை நிறுத்தம் அமலில் இருக்கும் என்றார். 3-ம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளேன் என்று டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு புகலிட விண்ணப்ப நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலி: அனைத்து புகலிட விண்ணப்பங்கள் நிறுத்தி வைப்பு – டிரம்ப் நிர்வாகம் அதிரடி
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>