துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இஸ்தான்புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இதனால், சிந்திர்கியில் பல கட்டிடங்கள் லேசாக குலுங்கின. எனினும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய பிற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. கடந்த ஆகஸ்டிலும் சிந்திர்கியில் கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. இதில் ஒருவர் பலியானார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, பாலிகெசிரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சிறிய அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டன. கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், 11 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரிக்டரில் 7.8 அளவிலான அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக சிரியாவின் வடக்கு பகுதியிலும் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
துருக்கியில் கடுமையான நிலநடுக்கம் – மக்கள் அச்சம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>