துல்கரின் ‘ஐ அம் கேம்’ படம் ஆகஸ்டில் வெளியீடு

Share

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் “ஐ அம் கேம்”. ஆர்டிஎக்ஸ் படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>