துல்கர் சல்மான் நடிக்கும் `ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் ஜூலை 27ம் தேதி வெளியாகிறது

Share

 துல்கர் சல்மான் நடிக்கும் `ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் ஜூலை 27ம் தேதி வெளியாகிறது. ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவரது நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார். தற்போது துல்கர் சல்மான், ‘ஐயம் கேம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகும் நேரடி தெலுங்கு திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதற்கிடையில் இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பொம்மா பொம்மா’ என்ற பாடல் ஜூலை 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>