துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

Share

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ஸ்ரீ ஸ்ரீ வெளியானது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி தனது நடிப்பு மற்றும் வித்தியாசமான கதைத்தேர்வுகளால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், சமீபத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார். தற்போது துல்கர் சல்மான், ‘ஐயம் கேம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகும் நேரடி தெலுங்கு திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதற்கிடையில், இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>