தூய்மை பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Share

என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

      தூய்மை பணியாளர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டித்துள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டங்களை பட்டியலிட்டு, தனது எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் பதிவிட்டு இருப்பதாவது; “நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,

தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு.  தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை. தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி

தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு. தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்.  பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி. தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்! இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>