தென்னயிலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்!

Share

பு.கஜிந்தன்

தென்னயிலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்!

தென்னையால் விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த செவ்வாயன்று உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 6ஆம் திகதி, தென்னையில் சீவல் தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் வழுக்கி கீழே விழுந்ததுள்ளார்.

இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>