தென் ஆப்பிரிக்காவுக்கான மானியங்கள் ரத்து – டிரம்ப் அதிரடி

Share

தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். எனவே தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்கான ஜி-20 மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என டிரம்ப் கூறினார். ஆனால் டிரம்பின் இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா மறுப்பு தெரிவித்தார். இந்தசூழலில் தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் மானியம், சலுகைகளையும் ரத்து செய்வதாக டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>