தென் ஆப்பிரிக்கா: கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 11 பேர் உயிரிழப்பு

Share

தென் ஆப்பிரிக்க நாட்டின் கடெங் மாகாணம் புரொட்டோரியோ நகரின் சவுல்ஸ்வில்லெ பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கேளிக்கை விடுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>