2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். திருச்சியில் இருந்து தனது முதல் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கரூர், ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சாவூர் போன்ற இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பிரசாரம் நடைபெற்ற இடங்களில் எல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வருகிறது. வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்று வருகின்றனர். த.வெ.க. அடுத்தகட்ட பிரசாரத்தை தென் மாவட்டத்தில் தொடங்க இருக்கிறது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணியில் கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திருநெல்வேலி, தென்காசி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இடம் தேர்வு செய்யும் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். கட்சிகளின் வளர்ச்சிக்கும், தேர்தல் வெற்றிக்கும் தென் மாவட்டங்களின் ஆதரவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அரசியல் கட்சிகள் தென் மாவட்ட பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அரசியல் மாநாடு, பேரணி, பொதுக்கூட்டங்கள் தொடர்ந்து தென் மாவட்டங்களில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. முக்கிய அரசியல் தலைவர்கள் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தென் மாவட்ட மக்களின் ஆதரவை அதிகரிக்க கட்சி தலைவர் விஜய் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி போன்ற தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
தென் மாவட்டங்களில் களமிறங்கும் விஜய்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>