தேசிய கடற்தொழில் அமைப்பின் அமைப்பாளர் ஜோசப் பிரான்சிஸ் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தார்.

Share

தேசிய கடற்தொழில் அமைப்பின் அமைப்பாளர் ஜோசப் பிரான்சிஸ் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தார்.

இதன் போது அவர் தெரிவிக்கையில், தற்பொழுது மீனவரின் வாழ்வாதாரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்களே கடத்தொழில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. ஏனைய நாட்களில் வலைகளை விரித்துவிட்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளத

தற்பொழுது மீன்களின் விலை சடுதியாக குறைந்து காணப்படுவதன் காரணமாக, போதிய வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் மீனவர் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடல் தொழில் சம்பந்தமாக புதிய புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும், இச்சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், சட்டம் தொடர்பாக எமக்கு போதிய தெளிவுபடுத்தப்படவில்லை.

இதன் காரணத்தினாலும் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது கூட அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மீனவர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அது எவ்வகையில் எமக்கு கிடைக்க பெற போகின்றது என்பது தொடர்பாகவும் இதுவரையில் தெரியவில்லை. அப்படி வழங்கப்படுகின்ற பணம் தமக்கு சரியான முறையில் கிடைக்கப் பெறுமா என்பது கூட பெரும் ஐயப்பாடாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>