தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ‘லோகமான்ய திலகர்’ தேசிய விருதை அமித்ஷா வழங்கினார்

Share

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 2026-ம் ஆண்டுக்கான ‘லோகமான்ய திலகர்’ தேசிய விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-அமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார், மத்திய கூட்டுறவுத் துறை இணைஅமைச்சர் முரளிதர் மொகல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது உரையில் தெரிவித்ததாவது: சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்” என்று முழங்கி, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய திசையையும், உத்வேகத்தையும் தந்த மாவீரர் லோகமான்ய பாலகங்காதர திலகரின் 106-வது நினைவு தினம் நாடு முழுவதும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய திலகரின் பாதையில், இன்று ஒட்டுமொத்த தேசமும் கலாச்சார தேசியவாதத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. அஜித் தோவலுக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட்டிருப்பது, தேச சேவைக்காக உழைக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக அமையும் என்று அமித்ஷா கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>