தேசிய மக்கள் சக்தி- சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு

Share

(02-09-2024)

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வை ஆதரித்து ‘நாடு அனுரவோடு’ எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்க சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு மாளிகைக்காடு தனியார் வரவேற்பு மண்டபத்தில் 01-9-2024 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் விவசாய கொள்கையின் திட்டமிடலுக்கான உப குழுவின் ஒருங்கிணைப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் அமைப்பின் குழு உறுப்பினருமான ஜீ.வி. எச். கோட்டாபய, தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் அம்பாறை நகர சபை முன்னாள் உறுப்பினருமான இந்திக்க விஜயவிக்கிரம ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதன்போது, சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் அமைப்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>