தேசிய விருது பெற்ற இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான இரா.செழியன் சென்னையில் காலமானார். ஒளிப்பதிவாளர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான செழியன் பணியாற்றி உள்ளார். ஒளிப்பதிவாளரும் உலக சினிமா என்ற நூலாசிரியருமான இரா.செழியன் இயக்கிய டூலெட் திரைப்படம் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. சிவகங்கையை சேர்ந்தவரான செழியன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை பெற்றவர் இரா.செழியன். செழியன் மறைவுக்கு திரையுலகினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய விருது பெற்ற இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான இரா.செழியன் காலமானார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>