தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Share

செப்டம்பர் 23 ஆம் தேதி அதிபர் திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் நாள் 2 என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வயது குழந்தை த்ரிஷாக்கு நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் என் 6 வயதில்தான் என் முதல் விருதை வென்றேன்; அந்த சாதனையை முறியடித்ததற்காக த்ரிஷா தோசருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்; நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள்: உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>