தேஜ கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி – டிடிவி தினகரன்

Share

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் – ஏற்கனவே தமிழகத்தை உலுக்கிய பாலியல் புகாரில் தொடர்புடைய அந்த “சார்” கைது செய்யப்படாததன் விளைவா ? அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர், அப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் மாணவியின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தியதாக எழுந்திருக்கும் புகார் அங்கு பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ”சார்” இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தற்போதைய பாலியல் புகாரின் பின்னணியிலும் அதே ”சார்” இருப்பாரோ ? என்ற சந்தேகம் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மத்தியில் எழுந்துள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>