தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கம் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தேமுதிக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டம், ஒழுங்கை சீர் செய்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தருமாறு தீர்மானம். தமிழக மக்களை வாட்டும் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருமாநிலங்களுக்கும் இடையில் பிரச்சனை ஏற்படாத வகையில் மேகதாது விவகாரத்தில் தீர்வு காணுமாறு தேமுதிக தீர்மானம். அரசு அறிவித்தபடி 717 மதுப்பானக் கடை மூடப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யுமாறு தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>