“தேரே இஷக் மெய்ன்” படத்தின் முதல் நாளில் ரூ.15 கோடி வசூல் – தனுஷ் அறிவிப்பு

Share

தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான‘தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் நேற்று வெளியானது. ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. படத்தின் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. ‘தேரே இஷக் மெய்ன்’ படம் இந்தியில் முதல் நாளில் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். உலகளவில் இந்த படம் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>