தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்

Share

மன்னாரில் கையெழுத்து வேலைத்திட்டம் ஆரம்பம்.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(20-07-2024)

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டம் 20-07-2024 அன்று சனிக்கிழமை காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்களிடம் குறித்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள்
வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை. அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும்.

இவ்வாறு பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்ற மையால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தொடர்பாக அனைத்து மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் குறித்த கையெழுத்துப் போராட்டம் 20-07-2024 அன்று மன்னாரில் முன்னெடுக்கப்
பட்டது.

இதன் போது மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்,இளைஞர்,யுவதிகளும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>