தேர்தல் கால கோடைக்கு மட்டும் நிதியா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி

Share

அதிமுக மீதான குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மக்களவை தேர்தலில்போது நிறுத்தப்படாத உரிமைத்தொகை சட்டமன்ற தேர்தலுக்கு நிறுத்துவோமா..? நடைமுறையில் உள்ள திட்டங்கள் ஒருபோதும் தேர்தலுக்காக நிறுத்தப்படாது. மகளிர் உரிமைத் தொகை 27 மாதங்கள் வழங்கப்படவில்லை. இதற்கு எதிப்பு தெரிவித்தோம். தேர்தல் தோல்வி பயத்தால் தற்போதே ரூ.5,000 கொடுத்துள்ளனர். மக்கள் செல்வாக்கை திமுக இழந்து விட்டது. தோல்வி பயத்தால் கடைசி நேரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார் ஸ்டாலின். 2022, 2023, 2024, 2025 -ல் கோடைகாலம் வந்துள்ளது. 2026 கோடைகாலத்துக்கு மட்டும் நிதியா..? இப்போதுதான் கோடைகாலம் முதல்-அமைச்சருக்கு தெரிகிறதா? ரூ.5000 வறுமையை போக்க கொடுக்கவில்லை. தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட‌து. திமுக ஆட்சியில் 4 கோடை கடந்துவிட்ட‌து. இப்போது மட்டும் ரூ.2000 ஏன்?.. வாக்குகளை பெற முதல்-அமைச்சர் நாடகத்தை நடத்தியிருக்கிறார். கரூர் சம்பவத்துக்கு பிறகு 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதவர் விஜய். என்னைப்போல் கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் அரசியல் தலைவர்களின் கடமை. கட்சி நடத்தவே தெரியாதவர் மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்..?

இவ்வாறு அவர் கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>