தை பிறந்தால் வழி பிறக்கும் – ஓ பன்னீர் செல்வம் பேட்டி

Share

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், ஓ பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓ பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறா? அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் வலுத்துள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வத்திடம் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>