தொடர் கண்காணிப்பில் நல்லகண்ணு – மருத்துவமனை நிர்வாகம்

Share

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101). வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அறிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள், நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்த நிலையில், நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நல்லகண்ணுவுக்கு பல்துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் நேற்று மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நல்லகண்ணுவுக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசக்கருவி சிகிச்சை, மருந்துகள், மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>