தோல்வி பயத்தால் வன்முறையைக் கையில் எடுக்கும் திமுக – நயினார் நாகேந்திரன் கண்டனம்

Share

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சிவகங்கையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் சேங்கை மாறனின் கூலிப்படை ஆட்கள் ஊடகவியலாளர் ராஜேஷ் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகவியலாளர்கள் தொடங்கி, பெண்கள், விவசாயிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் எனத் திமுகவின் ரவுடிகளால் யாருக்கும் ஆட்சி முடியும் தருவாயிலும் கூட பாதுகாப்பில்லை. சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை உணர்ந்த திமுக தனது ரவுடிதனத்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைக்கிறதா? அல்லது, தான் தோற்கும் போது தமிழகத்தில் யாருமே இருக்கக் கூடாது எனக் கொலைவெறியில் ஆடுகிறதா?

மொத்ததில், இனியொரு முறை திமுக ரவுடியிச ஆட்சி அமைந்தால் என்ன நடக்கும் என்பதையே இந்தக் கொடூரத் தாக்குதல் உணர்த்துகிறது. தமிழ்நாடும் தமிழ் மக்களும் வாழ வேண்டுமென்றால், திமுக வீழ வேண்டும்! என தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>