த.வெ.க. அரசுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள்யென மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்

Share

இடைத் தேர்தல் வெற்றி என்பது முதல்-அமைச்சர் தலைமையிலான அரசுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள்யென மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் அபார வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் மக்களின் பேராதரவோடு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 மாதங்களாக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும். த.வெ.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க. கட்டவிழ்த்துவிட்ட அவதூறு பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்த இடைத் தேர்தல் வெற்றி என்பது முதல்-அமைச்சர் தலைமையிலான அரசுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவை தமிழக மக்களின் பிரதிபலிப்பாக கருத வேண்டும். தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஒரு இடைத்தேர்தலை பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிற முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்யை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>