மலையாள திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வளம் வந்த நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. திடீர் உடல்நலக்குறைவால் நேற்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவரின் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பறவூரில் 1969ஆம் ஆண்டு பிறந்த சலீம் குமார், மிமிக்ரி கலைஞராக தனது கலைப்பயணத்தை தொடங்கினார். அதன்மூலம் திரையுலகிற்குள் நுழைந்த அவர், 1997இல் ‘இஷ்டமானு நூறு வட்டம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் சலீம் நடிததுள்ளார்.. 2011ஆம் ஆண்டு வெளியான ‘ஆதாமின்டே மகன் அபூ’ திரைப்படதின் தனது நடிப்புக்காக தேசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது மற்றும் கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். நடிப்பைத் தாண்டி 2017ஆம் அவர் இயக்கிய ‘கறுத்த யூதன்’ படம் சிறந்த கதைக்கான கேரள மாநில அரசு விருதை வென்றது. சலீம் குமார் தமிழில், ‘நேரம்’, ‘நெடுஞ்சாலை’, ‘மரியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவு மலையாளத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
நடிகர் சலீம் குமார் காலமானார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>