நடிகர் நானி திரைத்துறையில் அறிமுகமாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.நானி கடந்த 2008 ஆண்டு இயக்குநர் மோகன கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘அஷ்டா சம்மா’ எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் வெளியான ‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜமவுலியின் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் மொழிகளைக் கடந்து ரசிகர்கள் இவருக்கு ஏராளம். தனது இயல்பான நடிப்பால் நடிகர் நானி ‘நேச்சுரல் ஸ்டார்’ என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ , ‘தசரா’, ‘ஹாய் நான்னா’, ‘சூர்யாவின் சனிக்கிழமை’, ‘ஹிட் 3’ திரைப்படங்கள் அமோக வரவேற்பினை பெற்றன. இந்த நிலையில், நானி திரைத்துறையில் அறிமுகமாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “திரைத்துறையில் இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இப்போது சினிமாவில் ஒரு | இளைஞராகவே ஆகிவிட்டேன். எப்போதும் உங்களின் அன்பை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை. அப்படி இருக்கவும் மாட்டேன்!” என்று நடிகர் நானி ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் நானி திரைத்துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்தார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>