நடிகர் யாஷ் பிறந்தநாளில் “டாக்ஸிக்” படக்குழு புதிய பதாகை வெளியீடு

Share

கே.ஜி.எப்.’ படத்தில் கதாநாயகனாக நடித்து பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் யாஷ். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது. இவர் தற்போது இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் “டாக்ஸிக்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி வரும் இந்த படம் மார்ச் 19ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் யாஷ் இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், “டாக்ஸிக்” படக்குழு யாஷுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, அவரது கதாபாத்திர அறிமுக பதாகையையும் முன்னோட்டத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த பதாகையில் அவரது பெயர் “ராயா” என அறிவிக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>