நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் “மொத ராத்திரி” படத்தின் பாடல் வெளியானது

Share

நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக அறிமுகமாகும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் ‘டை டக்கா’ பாடல் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களை தொடர்ந்து, மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். புதிதாகத் திருமணமான ஜோடியின் வாழ்வில் நடைபெறும் காதல், நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் ‘மொத ராத்திரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. தற்போது பின்னணிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, முன்னோட்ட வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் முதல்காட்சி பதாகை சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் ‘டை டக்கா’ பாடல் வெளியானது. புகபாரதி எழுதிய இந்தப் பாடலை, பரத் ஷங்கர் பாடியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>