நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதி

Share

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர். இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களிலும் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.

இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக உடல் மெலிந்து காணப்பட்ட ரோபோ சங்கர் தொடர்ந்து திரைப்படங்களில் நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. படப்பிடிப்பின்போது அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து, அவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாட்களில் ரோபோ சங்கர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>