நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ‘சேயோன்’ படப்பிடிப்பை நிறைவு செய்தார்

Share

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ‘சேயோன்’ படப்பிடிப்பை நிறைவு செய்தார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை பாக்யஸ்ரீ போர்ஸ் நிறைவு செய்துள்ளார். ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தொடர்ந்து ‘காந்தா’, ‘கிங்டம்’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருப்பினும், இந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வணிக ரீதியான வெற்றியை பெறாததால், பாக்யஸ்ரீ பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியான ‘லெனின்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் அவரது திரைப்பயணத்தில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ‘லெனின்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேஷன் இப்படத்தை இயக்கி வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு ஆக்‌ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை பாக்யஸ்ரீ போர்ஸ் நிறைவு செய்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>