நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளீர்கள் என நாடாளுமன்றில் அநுர அரசாங்கத்தைச் சாடிய கஜேந்திரகுமார் எம்.பி!

Share

“உங்களை நம்பி, நீங்கள் சொன்னதை எல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது, திருகோணமலை சட்ட விரோத விகாரை அமைப்பு குறித்து 18-11-2025 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றியபோது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள்.

இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள்.

நீங்கள் அன்றிரவு எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே என்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு நீங்கள் பின்வாங்கியிருந்திருக்க கூடாது.

உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம்,

நீங்கள் ( இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும்
முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள் என தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>