நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழா காலத்தில் விதிக்கப்பட்ட தடை

Share

பு.கஜிந்தன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (08.08.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதற்கமைய திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோரால் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண தலைமை அலுவலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>