நல்லூர் பிரதேச சபையில் ஈ.பி.டி.பி வெளிநடப்பு – NPP உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் ஆட்சியை தனதாக்கியது மான்!

Share

NPP உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பத்மநாதன் மயூரன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் 13ம் திகதி அன்றையதினம் நல்லூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில்
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 7 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி 6 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், சங்கு 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இதன்படி தமிழ் மக்கள் கூட்டணியின் தவிசாளர் வேட்பாளராக மயூரன் சபையில் முன்மொழியப்பட்டார்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தன்னுடைய நிலைபாட்டை சபையில் தெரிவித்து குறித்த தவிசாளர் தெரிவை புறக்கணித்து வெளியேறியிருந்தது.

இன்னிலையில் வேறு போட்டியாளர் இன்மையால் தவிசாளராக தேர்ந்தெடுக்கபட்டார்.

இதன்படி சபையின் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளின் 19 உதுப்பினர்களினதும் ஏக விருப்பின் பெயரில் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்னிலையில் உப தவிசாளராக இராஜமனோகரன் ஜெயகரனும் சபையில் பிரசன்னமாக இருந்த குறித்த கட்சிகளின் ஏக விருப்புடன் தெரிவகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>