நவ மகாஜனா சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும்!

Share

பு.கஜிந்தன்

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் நவ மகாஜனா சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று (29) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வலி. வடக்கு பிரதேச செயளாளர் சிவஹீ அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆரம்பப் பிரிவிற்கான வலிகாமம் கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் முரளீதரன் அவர்களும், கௌரவ விருந்தினராக மகாஜனாக் கல்லூரியின் ஓய்வு நிலை உப அதிபர் தவராஜாவும் கலந்துகெண்டனர்.

மாணவர்களின் கலை நிகழ்வுகள் , விருந்தினர்களின் உரைகள் என்பவற்றுடன் கடந்த காலங்களில் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை இன்றைய நிகழ்வு தொடர்பான நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவரான கவிஞர் சிறிசபேசன் அவர்கள் நிகழ்த்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>