“நாகபந்தம்” படம் 2 நாளில் ரூ 13 கோடி வசூலித்தது

Share

‘நாகபந்தம்’ படம் 2 நாளில் ரூ 13 கோடி வசூலித்துள்ளது. மர்மத் திரில்லர் ‘நாகபந்தம்’ படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாகவும், நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகிகளாகவும், நடித்துள்ளனர். அபிஷேக் நாமா இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ரிஷப் மிரட்டியிருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நிக் ஸ்டுடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் பேனர்களில் கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகி ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூலை 3ம் தேதி வெளியானது. உலகை ஆளும் சக்திகொண்ட ‘பிரம்ம கமலம்’ என்ற மலருக்காக நடக்கும் யுத்தம்தான் இந்தப் படத்தின் கதைக்களம். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘நாகபந்தம்’ படம் முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான அனுபவமாக ஆன்மிகத்தையும், ஆக்சனையும் இணைக்கும் மாபெரும் புராண திரில்லராக வெளியாகியுள்ளது. இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோவில்களின் பின்னணியில் உருவாகி, நூற்றாண்டுகள் பழமையான நாகபந்தம் எனப்படும் மறைக்கப்பட்ட ஆன்மிக மரபை வெளிக்கொணர்கிறது. இந்நிலையில், ‘நாகபந்தம்’ படம் 2 நாட்களில் ரூ 13 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>