நாகார்ஜுனா நடிக்கும் ‘கிங் 100’ படம் டிசம்பர் 24-ந்தேதி வெளியாகிறது

Share

நாகார்ஜுனா நடிக்கும் ‘கிங் 100’ படம் டிசம்பர் 24-ந்தேதி வெளியாகிறது. நாகார்ஜுனாவின் 100-வது படத்தை தமிழ் இயக்குனர் ரா.கார்த்தி இயக்க இருக்கிறார். நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆகாசம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘கிங் 100’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில், நாகார்ஜுனா 25 வயது முதல் 60 வயது வரை பல்வேறு வயது தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அதிநவீன டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிக்கலாம் என்றும், இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் நடிகை தபு முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனா – தபு கூட்டணி மீண்டும் இணைகிறது என்பதும், அதிலும் தபு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் நாகார்ஜுனா இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாகார்ஜுனாவின் 100வது படத்திற்கு ‘கிங் 100’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளார். நாகார்ஜுனாவின் பிறந்தநாளையொட்டி ‘கிங் 100’ படத்தின் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>