நாக் அஷ்வின் – ரஜினிகாந்த் விரைவில் கூட்டணி?

Share

கல்கி 2898 ஏடி படத்தை இயக்கிய நாக் அஷ்வின், அதற்கான அடுத்த பாகத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டார். ஆனால், கதாநாயகன் பிரபாஸ் பல படங்களில் மும்மரமாக இருப்பதால், படப்பிடிப்பு பணிகள் தாமதமாகியுள்ளது. இந்த இடைவெளியில், நாக் அஷ்வின் ஆலியா பட்டுக்காக பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதற்கிடையில், வையஜயந்தி மூவிஸ் நிறுவனரான சி. அஷ்வினி தத்தின் ஏற்பாட்டில், நாக் அஷ்வின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். ரஜினி அந்தக் கதையை ரசித்து, முழு கதை தயார் செய்து கொண்டு வரும்படி நாக் அஷ்வினிடம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் சரியாக நடந்தால், வையஜயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த பிரமாண்டக் கூட்டணியை உருவாக்க இருக்கிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>