தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. காரைகுடியில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: மீண்டும் மீண்டும் உதய சூரியன், இரட்டை இலைக்கு வாக்களித்தால் எந்த சாமியும் உங்களை மன்னிக்காது. நாங்கள் வெற்றியை அடையும்வரை ஓய மாட்டோம்; தொடர்ச்சியாக போராடுவோம்; உன்னிடம் இருந்து உங்களுக்காக வந்து இந்த சமூகத்தை மாற்றி அமைக்க வந்த புரட்சியாளன் தான் இந்த சீமான். எனவே விவசாயி சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>