(மன்னார் நிருபர்)
(21-08-2021)
நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டத்தில் பைஸர் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை, முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கட்டையடம்பன் ம.வி பாடசாலை ஆகிய இடங்களில் பைஸர் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில்,பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோரின் உதவியுடன் குறித்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>