நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு இந்த படத்தில் இணைந்துள்ளார். அவர் ‘தி பாரடைஸ்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் நடிகர் மோகன் பாபு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>