பு.கஜிந்தன்
தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானம் சமயப் பணிகளுடன் இணைந்ததான சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக 4 வீடுகளும் இன்று (28.01.2024 – ஞாயிறு) காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து தெய்வ திருவுருவப் படங்கள் எடுத்துச்செல்லப்பட்டு வீடுகள் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த வீடுகள் துர்க்காபுரம் மகளிர் இல்ல பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வழங்கப்படவுள்ளதுடன் , 2010 ம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இத் திட்டத்தினூடாக ஏற்கனவே ஆலயத்தால் 9 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>