நாளைய நாட்டை ஆளப்போவது தலைவர்கள் அல்ல, இன்றைய இளைஞர்களே – இரா.பார்திபன்

Share

இந்த சட்டமன்றத் தேர்தலை ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போலவே பார்க்கிறேன் அதுவும் 3 காட்சிகள் மட்டுமல்ல, எல்லாக் காட்சிகளையும் நான் மட்டுமல்ல,  எல்லா மக்களும் நிறைவாக,  தெரு முழுவதும் நிறைவாக, சாலை எங்கும் நிறைவாக பார்க்கிறார்கள். அப்படி நிறைவாகப் பார்க்கும் மக்களை ‘முட்டாள்’ஆகப் பார்க்கும் அல்லது ‘முட்டாளாக்களாக ஆக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள், இத்திரைப்படத்தை விறுவிறுப்பு, நகைச்சுவை, அதிர்ச்சி ஆகியவை கலந்த ஒரு அவியல் கூட்டணி பொழுதுபோக்காக  தருகிறார்கள். என்னைப் போன்ற நடுநிலைவாதிகள் சுவாரஸ்யமாக ஆனால் கவலையுடன் பார்க்கிறோம். மொய் விருந்துப் போல பொய் விருந்து படைக்கப்படுகிறது, அதன் மீது மொய்க்கும் ஈக்களாக மக்கள் மெய்யாகவே ஈர்க்கப்படுகிறார்களா? அல்லது மக்களும் அரசியல்வாதிகளை ஏமாற்றப் பார்க்கிறார்களா? என்பதை பொறுத்திருந்தேப் பார்க்கவேண்டும். நாளைய நாட்டை ஆளப்போவது தலைவர்கள் அல்ல, இன்றைய இளைஞர்களே!! எனவே மக்கள் வெற்றி பெற யாருக்கு ஓட்டளிப்பது? ஆனால்,100 % வாக்குப்பதிவு நம் கடமை.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>