நாளை சூரிய கிரகணம்: இந்தியாவில் காண முடியாது.?

Share

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவும் வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. நாளை சரியாக பிற்பகல் 3.36 முதல் இரவு 7.57 வரை இந்த கிரகணம் நிகழ்கிறது.மொத்தம் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவிற்கு மேலே தெரியும். மேலும், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, தான்சானியா, நமீபியா மற்றும் மொரீஷியஸ், தென் அமெரிக்காவின் பகுதிகளான அர்ஜென்டினா மற்றும் சிலி ஆகியவற்றில் பகுதி அளவு சூரிய கிரகணமாக தெரிய வாய்ப்புள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்பதால், நாளை தினசரி செயல்பாடுகள், கோயில் தரிசனங்கள் அல்லது ஆன்மீகச் சடங்குகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இருக்காது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>