நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் நடிகை நிக்கி கல்ராணி

Share

மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் நிக்கி கல்ராணி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக

நடித்த டார்லிங் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். பின்னர், கலகலப்பு-2 ,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் நடிகர் ஆதியுடன் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்த போது இருவரும் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசு கிளம்பியது.

ஆனால், இரு தரப்பில் இருந்தும் இது குறித்து எந்தவிதமான தகவல்களையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். இத்தகைய நிலையில், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. விரைவில் திருமணம் என்று கூறப்பட்டு வந்தது. கடந்த வியாழன் மார்ச் 24 ஆம் தேதி நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்டு இதனை உறுதி செய்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>