நிந்தவூரில் பஸ்வண்டி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு

Share

(கனகராசா சரவணன்)

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியிலுள்ள நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பஸ்வண்டியுடன் மோட்டர்சைக்கிள் ஒன்று மேதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று சனிக்கிழமை (06) பகல் இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர்.

நிந்தவூர் 5 ம் பிரிவைச் சேர்ந்த 72 வயதுடைய அகமட் லெப்பை மீராலெப்பை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

பொத்துவில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி நிந்தவூர் மாட்டுபாளையம் சந்திக்கு அருகில் சம்பவதினமான இன்று பகல் 11.30 மணியளவில் அதே திசையில் பிரயாணித்த மோட்டர் சைக்கிள் வீதியின் வலது பக்கும் திரும்பிய நிலையில் பின்னால் வந்த பஸ்வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற வயோதிர் சம்பவ இடத்தில்; உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>