நிவின் பாலி – மமிதா நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகிறது. மலையாளத் திரையுலகில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமாகி ரூ.130 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்த ‘பிரேமலு’ திரைப்படத்தை இயக்கியவர் கிரிஷ் ஏ.டி. தான் தற்போது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தையும் இயக்கியுள்ளார். முன்னணி நட்சத்திரங்களான நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ இவர்களுடன் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், பிந்து பணிக்கர் மற்றும் ஸ்ரீந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தத் திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்க, அஜ்மல் சாபு ஒளிப்பதிவையும், ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
நிவின் பாலி – மமிதா நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>