நீர்மூழ்கி கப்பலில் இருந்து சீனா ஏவுகணை சோதனை நடத்தியது

Share

 நீர்மூழ்கி கப்பலில் இருந்து சீனா ஏவுகணை ஏவி சோதனை நடத்தியது. தென்சீன கடல் பகுதி மற்றும் பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தென்சீன கடல் பகுதியில் அவ்வப்போது போர் ஒத்திகை, கடற்படை பயிற்சி, ஏவுகணை சோதனைகளை சீனா நடத்தி வருகிறது. இதனால் சீனாவின் அண்டை நாடுகள், தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள தென்கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளும் அச்சுறுத்தலை சந்திப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், அணு ஆயுத வல்லமைபெற்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுணையை ஏவி சீனா சோதனை நடத்தியுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>