நேபாளத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் மனங்க், மைகுடி, பெக்லங், பார்பட், பல்பா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 14 பேர் மாயமான நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>