நேபாளத்தில் வெள்ள பாதிப்பில் 288 இந்தியர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது

Share

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 288 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 288 இந்தியர்களின் நிலை குறித்த தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனவர்களில் ‘திரிசூலி ஒன்’ மின் திட்டத்தில் பணிபுரியும் 73 இந்தியர்களும், சுற்றுலா குழுக்களும் அடங்குவர். இவர்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக, காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் நேபாள அரசுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். திபெத்தில் உள்ள சுமார் 200 இந்தியர்களும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். இந்தக் கடினமான சூழலில் இந்தியா நேபாளத்துடன் உறுதுணையாக நிற்கிறது. அந்நாட்டின் தேவைக்கேற்ப அனைத்து உதவிகளையும் வழங்க இந்திய அரசு தயாராக உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>