நேபாளப் பேரழிவு நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுத்துகிறதென வைரமுத்து கூறினார்

Share

நேபாளப் பேரழிவு நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுத்துகிறதென வைரமுத்து கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நேபாளப் பேரழிவு நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுத்துகிறது. மலைகளின் மீது வெள்ளத்தின் படையெடுப்பு குன்றுகளைப் பெயர்த்து கோலியாடிக்கொண்டே செல்லும் வெள்ளம் பார்த்து உலகம் உறைந்து நிற்கிறது. இது நிலநடுக்கத்தின் விளைவல்ல. பனிப்பாறை சரிந்ததில் 5 ரிக்டருக்குமேல் பூமி அதிர்ந்திருக்கிறது என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. நேபாளியோ இந்தியனோ தமிழனோ பிறநாட்டாரோ எல்லாரும் மனிதர்கள். உயிருள்ள ஒவ்வொருவரும் சேதாரமின்றி மீட்கப்பட வேண்டும் என்பதே காலத்தின் கவலையாக இருக்கிறது. இயற்கை இவ்வளவு மோசமாக மனிதர்களை எச்சரிக்க வேண்டியதில்லை. இந்த நிகழ்வு உலகுக்கொரு பாடம். இயற்கையை இயற்கையாக இருக்கவிடும் வரைக்கும் மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்து போகலாம். இறந்தோர்க்கு இரங்கல்; இருப்போர் மீட்கப்பட வேண்டுமே என்பது என் தவிப்பு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>